ARVI LYRICS
Monday, February 13, 2023
காலை
விழி மூடி
தூங்கும் போது
விழியை வருடும் ஒளி...!
Monday, January 9, 2023
இலக்கு
நம்மை
துரத்தும் கனவுகளின்
சேருமிடம்....!
Saturday, December 24, 2022
கடிகாரம்
நகரும் நிமிடம்யாவும்
டிக் டிக் டிக் என்றாலும்
சில நேரங்களில்
பக் பக் பக் என்றும்
திக் திக் திக் என்றும்
மாறியும் கேட்கிறது....!
Sunday, December 18, 2022
மெழுகுவர்த்தி
மெய்யான
மெய்சிலிர்க்கும்
மெஸ்ஸியின்
கால்பந்தாட்டம்.....!
Sunday, November 27, 2022
கால் பந்து திருவிழா
இலக்கை (goal)
அடைந்தால் வெற்றி
அடையவில்லை என்றால்
முயற்சி.....!
Saturday, November 19, 2022
இயற்கை
மழையும் வெயிலும்
வசன வரிகள் (subtitle)
இல்லாமல் நடக்கும் அதிசயம்....!
Thursday, November 17, 2022
ஜன்னல்
நகரும் தொடர்வண்டியில்
பல இயற்கை காட்சிகள்
கடந்து செல்கிறது....!
Friday, November 11, 2022
அனுபவம்
வெற்றியை விட தோல்வி கற்பித்த பாடங்கள் அதிகம்....!
Tuesday, November 1, 2022
ரசிப்பு
ரசிப்பு
வீட்டை சுற்றி
பெய்யும் மழை
மனதை சுற்றி
நனையும் சாரல்.....!
Monday, October 17, 2022
ஆளுமை
இயற்கையால்
மழை,வெயில், பனி
திட்டமிட்டு
அனுப்பி வைக்கப்படுகின்றன.....!
Wednesday, October 5, 2022
காலம்
கரைந்து கொண்டேயிருக்கும் நிமிடங்கள்யாவும்
பல ரகசியத்தை
சொல்லித்தருகிறது...!
Thursday, September 15, 2022
நீதி தேவதை
சில தீர்ப்புகள்
மனதினுள்
வாதடப்படுகிறது....!
Monday, September 5, 2022
ஆசிரியர்
மாணவர்கள்
வளர்ச்சியையும்
வாழ்க்கையையும்
மாற்றும்
வழிகாட்டி..!
Wednesday, August 24, 2022
சொர்க்கம்
அதிகாலை
சுடாத சூரியன்
சுடும் தேநீர்
சுழலும் மனது....!
Sunday, August 14, 2022
விடுதலை
பல சரித்திர கதைகள்
கலந்தது நம் சுதந்திர காற்று....!
Saturday, August 6, 2022
சரித்திரம்
வாழ்க்கை காகிதத்தில்
வெற்றிகளும்
வெற்றிடமும்
நம்மால் எழுதப்படுகிறது....!
Sunday, July 31, 2022
சதுரங்கம்
கறுப்பு வெள்ளையாய்
சில கட்டங்களும் சட்டங்களும்
நம்மை நகர்த்துகிறது....!
Saturday, July 16, 2022
பாரட்டுகள்
நம்
வாழ்க்கையின் உத்வேகத்தை
அதிகரிக்கிறது....!
Wednesday, July 13, 2022
எதிரோலி
பிறரிடம் அன்பை மட்டும்
பகிர்வதால்
திரும்ப கிடைக்கிறது....!
Sunday, July 10, 2022
மொட்டை மாடி
என்னுள் புகுந்து
உற்சாகப்படுத்தும்
ஜூலை காற்று.....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!