Monday, January 9, 2017

ஈரம்

  பணிக்கு செல்கிறேன் பனித்துளிக்குள் நனைந்து...!

Saturday, December 31, 2016

2016


வெற்றி  நாட்கள்
வெளிப்படையான நாட்கள்
வெளிரிய நாட்கள்
வெதுவெதுப்பான நாட்கள்
வெந்த நாட்கள்
அனைத்தும் அவளுடன்
கலந்தும் கரைந்தும்
போனது....
நாளைய நாட்களை
தேடுகிறேன்....!

Sunday, December 25, 2016

ஏமாற்றம்


அவள் என்னை
பற்றிய
வெள்ளை  அறிக்கை
இதுவரை  வெளியிடவில்லை....!

Sunday, November 13, 2016

தவம்


அவளின் பட்டும் படாத
பார்வையால்
ஈரேழு உலகங்களை
காண்கிறேன்...!

Wednesday, October 12, 2016

கவிதை

அவளால் பயணப்பட்ட
தருணங்களை எழதி கொண்டே இருக்கிறேன்...!

Thursday, August 18, 2016

பின்பற்றுபவர்கள்(Followers)

தூக்கத்தில் அவளின் கனவுகளாலும்
தூங்காத பொழுதுகளில்
அவளின் பார்வை அலைவரிசையிலும் இயங்குகிறேன்....!

Friday, August 5, 2016

ரகசியம்

என் நித்திரை கனவுகளில் ஜனாதிபதி போட்டியில்
நானும் இருக்கிறேன்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!