Friday, January 24, 2020

கடவுள்

நம்முள்
உணரப்பட்டாலும்
உணராவிட்டாலும்
நம்மை சுற்றியுள்ள ஜீவன்...!

Sunday, January 12, 2020

வண்ணம்

அவளின் பார்வையில்
என் மூன்று உலகங்களும்
ஒளிர்கிறது....!

Friday, January 10, 2020

புன்னகை

சில தருணங்களில்
வெளிப்பட்டும்
வெளிப்படாமலும்
நம்முள்ளே புதைந்திருக்கும்
உணர்வு......!

Monday, December 30, 2019

மார்கழி

ஊட்டியின் குளிர்
என் சாலையெங்கும்
பரவிக்கிடக்கிறது....!

Tuesday, December 24, 2019

அலாரம்


சில கனவுகள்
நடுநிசியிலும்
நம்மை எழுப்பி விடுகிறது

Friday, December 20, 2019

பனிக்காலம்

பகலிலும்
குளிர்ந்த காற்று
எங்கும் பரவிக்கிடப்பதால்
சுடாத சூரியன்....!

Wednesday, December 4, 2019

Mannerisms(செய்கைகள்)

சில சமயங்களில்
நம் செயல்கள்யாவும்
நமது முன்னோர்களின்
பழக்கத்துடன் ஒத்துப்போகிறது...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!