Monday, June 26, 2017

நொடி

நகரும் நாழிகைகள்
என்னுள் நகராத அவளின்
பிம்பங்கள்..!

Friday, May 26, 2017

இசை

அவளது அரை
நொடிப்புன்னகை
என்னுள் ஒலிக்கிறது...!

Friday, May 5, 2017

மழை

குடையின்றி
முப்பொழுதும்
அவளின் அன்பில்
நனைகிறேன்...!

Sunday, April 30, 2017

தொலைவு

உன் தொலைவு
எனக்கு தூரமில்லை
என் நினைவுகள்
உன்னுடன் இருக்கும் வரை...!

Tuesday, April 25, 2017

பிரிவு

அவளின் கனவுகளுக்காகவே
அதிகம் தூங்குகிறேன்...!

Thursday, April 20, 2017

வண்ணங்கள்

அவளது வருகையால்
கனவுகளையும் 
வகைப்படுத்த முடிகிறது.

Saturday, April 8, 2017

நுண்பார்வையாளர்(Micro observer)

என்னுள் புகுந்த
அவளால்
எப்பொழுதும்
கண்காணிக்கப்படுகிறேன்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!