Wednesday, October 30, 2019

பாடல்

ஏனோ ஏனோ

உன்னாலே
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது

துரத்தும் கனவுகளும்
தீராத நினைவுகளும்
என்னுள் நகர்ந்து இயக்குகிறது

கண்ணை மூடி
கவிதை பாடி நகரும் நாட்கள்......

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

அவளின் புன்னகை யாவும்
காற்றில் கலந்து இசையாய்
என்னுள் எங்கும் ஒலிக்கிறது....

தினம் தினம்
பூக்கும் மலராய்
வண்ணங்களாய் ஒளிர்கிறது....

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

சுவாசத்திலும் நல்ல
வாசம் தந்து
என் வாழ்வின் வாசனை மாற்றினாய்...

உன் பார்வையில்
பல  கதைகள் சொல்லி
என்னுள் அமர்கிறாய்.....

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!