Saturday, October 1, 2011

தேர்தல்

வந்து விட்டார்கள்
என் விரலுக்கு சாயம் பூச.......!
சட்டத்தில் திருத்தம் 
என் வீட்டு சுவரில் பூச தடை ....!
பதிவுகள் இங்கே பதவிகள் 
வாங்கி தருகிறது .....!


ஓட்டு அளிப்பது ஜனநாயக கடமை .தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டுகிறேன் .

Saturday, September 3, 2011

கடவுச்சொல்(PASSWORD)

அவளின் பெயரை
கடவுச்சொல்லாக  பயன்படுத்துவதில்லை
இணையத்தில் வைரஸ்கள் இருப்பதால் .....!

Wednesday, July 13, 2011

இரகசிய அறை

நீதி மன்ற தீர்ப்புகளுக்கு 
அப்பாற்பட்டது 
என் மனதின் இரகசிய அறைகளில் 
புதைந்து கிடக்கும் 
அவளின் 
கற்பனைகள் ,கவிதைகள்,நினைவுகள் ,
கனவுகள் ,சந்தோஷ நிமிடங்கள் ,துக்க தருணங்கள் 
இன்ன பிற ......!

Saturday, July 9, 2011

குளியல்

என் இல்லத்திற்கு
மழை காலங்களில்
 குளிர்ந்த நீரில் தான் 
குளியல் .....!

Saturday, July 2, 2011

வருமான வரி தாக்கல்

நான் சேமித்த
அவளின் சிரிப்பை
தவிர அனைத்தையும் தாக்கல்
செய்து விட்டேன் ......!

Saturday, June 25, 2011

தட்ப வெப்ப நிலை


உன் குளிர்ந்த பார்வை 
என் மீது பட்டும் 
ஏனோ என்னுள் வெப்பம் ....!

Saturday, June 18, 2011

முகவரி

நீ நேசித்து இருந்தால்
உலகம் தவற விட்டு இருக்கும்

இந்த கவிஞரை ........!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!