Thursday, November 15, 2012

போட்டு தாக்குது


உனக்காக காத்திருந்த நிமிடங்களில்
உன் பெயரின் தாக்கம்
உன்னை பார்த்து விட்டு
சென்ற போழுது
உன் வாசத்தின் தாக்கம் ..............!

Friday, September 14, 2012

பாடல் 2

நம்ம ஹீரோ பஸ் ஸ்டாப்ல நிக்கறாரு .பஸ் கிளம்பிய பிறகு ஓடி வந்து பஸ் படிகட்டுல வந்து நிற்கிறார் .


அந்தம்மா (கதாநாயகி ) அப்படியே ஓர கண்ணால ஒரு லுக் விடறாங்க .ஹீரோ அப்படியே ஒரு பார்வை கதாநாயகி மேல இந்த situation சாங் போட சொல்லி டைரக்டர் (படிக்கிற நீங்க தான்,கதைய மாத்தனும் நினச்சா மாத்துங்க என் தெரியுமா நீங்க தான் டைரக்டர் அச்சே )

ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

ஒரு பிடியில் பஸ் படிகள்
மறு பிடியில் அவள் விழிகள்

மாட்டி கொண்டன என் விழிகள்
மறந்து போன என் வழி பாதைகள் .....!


ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

இந்த பஸ்ஸில் யாரடி வைத்தது பாராசூட்டை ...
என்னை பறக்க வைத்து நீயும் பறந்து வருகிறாய் என்னுடன் ....!

ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

உன் விழியின் வாக்குறுதியில்
உன் பேச தருணங்களை
அப்படியே ஏற்று கொள்கிறேன் நானடி ....!
ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்


சின்ன சின்ன மேடுகளை பஸ் கடக்கும் போதும்
உன் இமைகள் மூடும் விழிகளை ரசித்தேன் நானடி...!

Monday, August 20, 2012

எங்கேயும் கேட்கும் குரல்


நீ பேசுவது கேட்கிறது
நான் பேசுவதும் உனக்கு கேட்கும் 
நடுவில் இருப்பது தூரம் மட்டும் தான்.

Thursday, July 19, 2012

நிலவு ஒளி வாரியம்


        
இருட்டான 
என் சாலையை
தடையில்லா
  நிலவு  ஒளியில் 
காண்கிறேன்

Sunday, July 8, 2012

பகிர்ந்தளித்தல்


             
இரு விழிகளுக்கும்
பகிர்ந்தளிக்கிறேன்
உன் கனவுகளையும் 
காண பொழுதுகளையும் .......!



Saturday, April 14, 2012

முதல் விமான பயணம்


கண்கள் பர பரத்தன 
மனது பட படத்தன 
வண்ணத்து பூச்சி மேல் 
அமர்ந்து பறந்தது போல் இருந்தது ....!
அருகில் இருப்பவர் கேட்பார் 
முதல் முறையா என்று.....!
களைந்து போய்விடும் வானத்து 
வெள்ளை வண்ண மேக கனவுகள் ..........!

Tuesday, February 21, 2012

காதலர் தினம்

அவளால் கொண்டப்பட்டது



அன்றய நாளும்


என் எல்லா நாட்களும் ....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!