Monday, April 14, 2014

வாடா மலர்கள்

என் இதய அலமாரி
அவளின் புன்னகை பூக்களின் 
வாசனையால் 
நிரம்பி கிடக்கிறது.....! 

Wednesday, March 26, 2014

Radio Detection and Ranging (RADAR )

அவள் எந்த தொலைவில் 
உள்ள பொழுதும்
மனசுக்குள்
மட்டும் அறியப்படுகிறது
அவளின் அசைவுகள்

Friday, February 14, 2014

மன கிடங்கு

உன்னை பிடிக்க ஆரம்பித்த
நாள் முதல்
உன் பேச்சுதமிழ் வார்த்தைகளைகூட
சேமிக்கிறேன் ...........!

Friday, December 6, 2013

நிகழ்வுகள்

என்னுள் கலந்திருக்கும் 
 கவிதைகள்  எப்போதாவது
எட்டி பார்க்க தான் செய்கிறது
அவை எழுதிவைக்கபடிகின்றன 
சில அனுபவிக்கபடுகின்றன
மற்றவையெல்லாம் மறந்து போகின்றன.

Thursday, October 31, 2013



தித்திக்கும் இனிப்புகள்
பள பளக்கும் மத்தாப்புக்கள்  ஜொலிக்கும் புத்தாடைகள்
பரபரக்கும் சாலைகள் பரிமாறும் வாழ்த்துக்கள்

வெடிக்கும் வாண வேடிக்கைகள்  
நிரம்பும்  பேருந்து /புகை வண்டி இருக்கைகள்
பரஸ்பரம்  பரவும் வேலைகள்
சினேகமாகும் சிரிப்ப்புகள்
கலந்து  இந்த திப ஒளி  திருநாள்  
ஓயாத மகிழ்வைதர மனதார வாழ்த்துகிறேன்

Friday, October 25, 2013

இரண்டாம் உலகம்

https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcQNVb9802-70oMyjtVOajnR8gUiYdr_Sb6j7FcT62v1CVmwpsqdbAதினமும்
என் மகளின் பள்ளிச்சர்ந்த
விவரிப்புகள் என்னையும்
அவளின் சக தோழனாக
மாற்றியது ..!

Saturday, October 19, 2013

நிறப்பிரிகை(Dispersion)

அவள் விழிகளால் 

வருடிய நாட்கள்  மட்டும் 

நிறங்களால்  நிரம்பி வழிகிறது ..!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!