ARVI LYRICS
Saturday, September 3, 2011
கடவுச்சொல்(PASSWORD)
அவளின் பெயரை
கடவுச்சொல்லாக பயன்படுத்துவதில்லை
இணையத்தில் வைரஸ்கள் இருப்பதால் .....!
Wednesday, July 13, 2011
இரகசிய அறை
நீதி மன்ற தீர்ப்புகளுக்கு
அப்பாற்பட்டது
என் மனதின் இரகசிய அறைகளில்
புதைந்து கிடக்கும்
அவளின்
கற்பனைகள் ,கவிதைகள்,நினைவுகள் ,
கனவுகள் ,சந்தோஷ நிமிடங்கள் ,துக்க தருணங்கள்
இன்ன பிற ......!
Saturday, July 9, 2011
குளியல்
என் இல்லத்திற்கு
மழை காலங்களில்
குளிர்ந்த நீரில் தான்
குளியல் .....!
Saturday, July 2, 2011
வருமான வரி தாக்கல்
நான் சேமித்த
அவளின் சிரிப்பை
தவிர அனைத்தையும் தாக்கல்
செய்து விட்டேன் ......!
Saturday, June 25, 2011
தட்ப வெப்ப நிலை
உன் குளிர்ந்த பார்வை
என் மீது பட்டும்
ஏனோ என்னுள் வெப்பம் ....!
Saturday, June 18, 2011
முகவரி
நீ நேசித்து இருந்தால்
உலகம் தவற விட்டு இருக்கும்
இந்த கவிஞரை ........!
Sunday, May 29, 2011
கோடை விடுமுறை
கோடை விடுமுறைக்கு
பயப்படுகிறேன்
அம்மாவின் அதட்டல் அதிகரிக்கும் என்று ...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!