Thursday, July 19, 2012

நிலவு ஒளி வாரியம்


        
இருட்டான 
என் சாலையை
தடையில்லா
  நிலவு  ஒளியில் 
காண்கிறேன்

Sunday, July 8, 2012

பகிர்ந்தளித்தல்


             
இரு விழிகளுக்கும்
பகிர்ந்தளிக்கிறேன்
உன் கனவுகளையும் 
காண பொழுதுகளையும் .......!



Saturday, April 14, 2012

முதல் விமான பயணம்


கண்கள் பர பரத்தன 
மனது பட படத்தன 
வண்ணத்து பூச்சி மேல் 
அமர்ந்து பறந்தது போல் இருந்தது ....!
அருகில் இருப்பவர் கேட்பார் 
முதல் முறையா என்று.....!
களைந்து போய்விடும் வானத்து 
வெள்ளை வண்ண மேக கனவுகள் ..........!

Tuesday, February 21, 2012

காதலர் தினம்

அவளால் கொண்டப்பட்டது



அன்றய நாளும்


என் எல்லா நாட்களும் ....!

Saturday, December 17, 2011

முச்சு பயிற்சி

கட்டாயமாக்கப்பட்ட என் நகர வாழ்கையில்
விடுமுறைக்கு மட்டும்
 சொந்த ஊர்
சென்று சுவாசிக்கிறேன்
சொந்தங்களையும் சுத்த காற்றையும் .........!

Sunday, November 13, 2011

தொலைந்து போனது

தனிமை 
என்னிடம் கேட்கிறது 
கைபேசி இல்லாமல் 
நீ இருப்பதில்லை ......!


Saturday, October 1, 2011

தேர்தல்

வந்து விட்டார்கள்
என் விரலுக்கு சாயம் பூச.......!
சட்டத்தில் திருத்தம் 
என் வீட்டு சுவரில் பூச தடை ....!
பதிவுகள் இங்கே பதவிகள் 
வாங்கி தருகிறது .....!


ஓட்டு அளிப்பது ஜனநாயக கடமை .தவறாமல் ஓட்டு அளிக்க வேண்டுகிறேன் .

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!