Friday, November 29, 2019

புன்னகை


சில விநாடியில்
கடந்து போனலும்
நம் மனதில்
நீடித்துவிடுகிறது....!

Wednesday, November 27, 2019

இரு சக்கர வாகனம்

எதிர்பாராத மழையில்
நனைந்து
திக்கற்று நிக்கிறேன்....!

Sunday, November 17, 2019

விடியல்

தினமும் பிறக்கும்
நாளுக்கான நம்பிக்கையின்
தொடக்கம்...!

Wednesday, November 13, 2019

நினைவலைகள்

பழைய
புகைப்படங்கள்யாவும்
பல கதைகளை
பேசி நகர்கிறது....!

Monday, November 11, 2019

மனம்

நாட்களின் 
சுவையையும் நிறத்தையும்
தீர்மானிக்கிறது....!

Thursday, November 7, 2019

பேச்சு

கடந்து போன பிறகும்
மௌன வாசனையால்
தொடர்கிறது..!

Wednesday, October 30, 2019

பாடல்

ஏனோ ஏனோ

உன்னாலே
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது

துரத்தும் கனவுகளும்
தீராத நினைவுகளும்
என்னுள் நகர்ந்து இயக்குகிறது

கண்ணை மூடி
கவிதை பாடி நகரும் நாட்கள்......

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

அவளின் புன்னகை யாவும்
காற்றில் கலந்து இசையாய்
என்னுள் எங்கும் ஒலிக்கிறது....

தினம் தினம்
பூக்கும் மலராய்
வண்ணங்களாய் ஒளிர்கிறது....

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

சுவாசத்திலும் நல்ல
வாசம் தந்து
என் வாழ்வின் வாசனை மாற்றினாய்...

உன் பார்வையில்
பல  கதைகள் சொல்லி
என்னுள் அமர்கிறாய்.....

ஏனோ ஏனோ
என் நிமிடங்கள் யாவும் நீள்கிறது
உன்னாலே

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!