Wednesday, October 13, 2010

விழி மொழி


அகராதியில்
தேடியும்
கிடைக்காத
பொருள்.......!

Saturday, October 2, 2010

ipod


என்னுடன் பேசி கொண்டே



இருக்கிறது



நான் மௌனமாகும் பொழுது .....!

Wednesday, September 29, 2010

சூரியன்


அதிகாலை
ஜன்னல் வழியே வந்து
என் விழி வருடிய
ஒளி .......!

Saturday, September 25, 2010

காப்புரிமை


இரவல் இசையாய்

உன் குரல்

காத்து இருக்கிறேன்

என் காதலுக்கும்

காப்புரிமைக்காகவும் ...!


Saturday, September 18, 2010

வாசஸ்தலம்


உன் நெற்றியில்

பொட்டு

வாசம் செய்கிறது

என் விரல் பட்டும் படாமலும் ...!




மனஸ்தாபம்


உன்னை
கொண்டாடும் உரிமைக்காக
எனக்கும்
என் விழிகளுக்கும்....!

Wednesday, September 1, 2010

கனவுகள்

என்னை பற்றிய
கனவுகளை நீ
சொன்னதே இல்லை
வெட்கத்தாலா ?
வேட்கையாலா ?

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!