Wednesday, April 1, 2015

இதயத் துடிப்பு (Palpitation)

தினமும்  நன்றாக
தூங்குகிறேன்
உன் இதய அமைதிக்காக மட்டும் .....!

Tuesday, February 10, 2015

24 x 7

என்  நாட்களுக்குள்
ஒளிந்து கொண்டு
என்னை  இயக்குகிறாள் ......!

Monday, February 2, 2015

திகைப்பு

குடை பிடிக்காத தருணங்களில்
திடீர் மழையாய்
அவள்  என்னை கடந்து  சென்றால் .....!

Sunday, December 28, 2014

2014

என்னை கடந்த நிமிடங்களின் 
நினைவுகளால்...... 
கற்று கொண்டேன் 
கவிதைகளையும் கனவுகளையும்....!

Monday, December 1, 2014

குடை

அவள் கடக்கும் பொழுது
உதிரும் புன்னகை தேடுவது போல்
மழைக்காலங்களில்
தேடுகிறேன்....!

Wednesday, October 29, 2014

இமைப்படல அழற்சி 


conjunctivitis-madras eye

(இமைப்படல அழற்சி )
அவளை பார்த்தால்
மட்டும் வரவில்லை
அவளுக்கு  வந்ததால்  எனக்கும்  வந்தது......!

Thursday, August 21, 2014

இணைய நெறிமுறை (Internet Protocol - IP)

என்னுள்
அவளுக்கு பிடித்தவற்றை பிடித்தும்
பிடிக்காதவற்றை பிடிக்காமலும் மாறி விட்டது ......!
என் அனைத்து   நிகழ்வுகளும் 
அவளது இதய நெறிமுறையின் கோட்பாடுகளுடன்
ஒன்றிவிட்டது ...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!