Tuesday, March 12, 2019

கண் திருஷ்டி

அவளின்
பார்வை பட்டு என்னுள்
கவிதை பிறக்கிறது....!

Saturday, March 9, 2019

நேரம்

நிஜத்திலும்
நினைவிலும்
கனவிலும்
என் நிமிடங்களில்
புகுந்து பயணிக்கிறாள்......!

Friday, March 8, 2019

அன்பு

அவளால்
அளவில்லாது பொழிந்து
என் நாட்கள்யாவும் அழுகாகிறது.....!

Monday, February 25, 2019

திகைப்பு

ஒரு விநாடி விழி பார்வையில்
பல கதைகள்
என்னுள் படர்கிறது......!

Thursday, February 21, 2019

"புன்னகை " பாடல்

சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...

என் உலகம் முழுக்க உன் புன்னகை பூக்கள் வாசம் எப்போதும் வீசூதடி

உன்னை பிரிந்த பொழுதுகள்யாவும் உன் புன்னகையின்றி தவிக்கிறேன் நானடி.....

சஹியே சஹியே
உன் புன்னகை மட்டும் போதும் எனக்கு...

உன் ஒரு நொடி புன்னகையில் என் ஆயுள் இன்னும் நீளுதடி....
தினம் தினம் உதிக்கட்டும்
என் நாட்கள் திருவிழாய் ஜொலிக்கட்டும்
சஹியே சஹியே...

Friday, February 15, 2019

தியானம்

அவளை காணும் பொழுது
கண்களை திறந்தும்
இல்லாத பொழுதுகளில்
கண்களை மூடியும்
நகர்கிறது என் நாட்கள்... !

Saturday, February 9, 2019

ஆசிரியை

இப்போது என் பள்ளி பருவ பாடங்கள்யாவும்
மகளால் மறுபடியும்
மதிப்பிடப்படுகிறது....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!