Friday, September 14, 2012

பாடல் 2

நம்ம ஹீரோ பஸ் ஸ்டாப்ல நிக்கறாரு .பஸ் கிளம்பிய பிறகு ஓடி வந்து பஸ் படிகட்டுல வந்து நிற்கிறார் .


அந்தம்மா (கதாநாயகி ) அப்படியே ஓர கண்ணால ஒரு லுக் விடறாங்க .ஹீரோ அப்படியே ஒரு பார்வை கதாநாயகி மேல இந்த situation சாங் போட சொல்லி டைரக்டர் (படிக்கிற நீங்க தான்,கதைய மாத்தனும் நினச்சா மாத்துங்க என் தெரியுமா நீங்க தான் டைரக்டர் அச்சே )

ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

ஒரு பிடியில் பஸ் படிகள்
மறு பிடியில் அவள் விழிகள்

மாட்டி கொண்டன என் விழிகள்
மறந்து போன என் வழி பாதைகள் .....!


ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

இந்த பஸ்ஸில் யாரடி வைத்தது பாராசூட்டை ...
என்னை பறக்க வைத்து நீயும் பறந்து வருகிறாய் என்னுடன் ....!

ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்

உன் விழியின் வாக்குறுதியில்
உன் பேச தருணங்களை
அப்படியே ஏற்று கொள்கிறேன் நானடி ....!
ஓடி வந்தேன்
ஆடி வந்தேன்


சின்ன சின்ன மேடுகளை பஸ் கடக்கும் போதும்
உன் இமைகள் மூடும் விழிகளை ரசித்தேன் நானடி...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!