Tuesday, December 28, 2021

துணை


பிடித்த  பாடல்களுடன்
நெடுந்தூர பயணம்....!

Monday, December 27, 2021

கனா


கலைந்ததும்
கடந்ததும் 
மனதின் ஒரத்தில் 
தூங்குகிறது....!

Friday, December 24, 2021

நிலா



எவ்வளவு பேசினாலும்
மௌனமாக 
 நம்மை ரசிக்கிறது....! 

Sunday, December 19, 2021

அர்ப்பணிப்பு



தூங்காமல் விழித்திருந்து
என்னை எழுப்பும்
அலாரம்....!

Tuesday, December 14, 2021

பால்கனி


காற்று 
வெயில்
என்னை தீண்ட 
அனுமதிக்கிறது....!

Sunday, December 5, 2021

வாழ்க்கை


நம் பயணங்களில்
சில பொய் மனிதர்களை 
தாண்டி
கடந்து போகிறோம்....!

Wednesday, December 1, 2021

சேமிப்பு


சில நன்றிகளும்
சில பாராட்டுகளும்
நம்மை இயக்குகிறது...! 

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!