Wednesday, July 31, 2019

ருசி


பசிக்காத தருணத்திலும்
மனமெங்கும் மணக்கிறது
பிடித்த உணவை உண்ணும் பொழுது....!

Thursday, July 25, 2019

தூவாலைக்குழாய் (shower pipe)

லேசான மழையில்
குடையின்றி
நகர்கிறேன்....!

Friday, July 19, 2019

OTP (ஒரு முறை கடவுச்சொல்)

என் பரிவர்த்தனைகளை
நிர்வகிக்கும்
யூகிக்க முடியாத
எண்களின்
ராஜ்ஜியம்....!

Thursday, July 18, 2019

ஜன்னல்


காலையில் திறந்தவுடன்
என் மீது அமைதியாக
மோதுகிறது மெல்லிய காற்று.....!

Monday, July 15, 2019

ரசிப்பு

மனதில்
மீண்டும் மீண்டும் ஒளிக்கிறது
பிடித்த பாடலின் வரிகள்.....!

Tuesday, July 9, 2019

மழை குறுக்கீடு

இன்று தொடங்கும் வரை
கிரிக்கெட் காதலர்களுக்கு
கொஞ்சம் அதிகமாக துடிக்கும்
லப் டப்....!

Saturday, July 6, 2019

இடைவேளை


அலுவலக தேநீர்
நிறம் சுவை திடம் மற்றும்
அரட்டையுடன்
கலந்துள்ளது....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!