Tuesday, May 31, 2022

பயணம்


எல்லோரும் பயணிக்கும் 
அதே பாதைதான்
ஆனால்  அதை 
சில நேரங்களில்
கொண்டாட தெரிந்த மனது....!

Monday, May 23, 2022

மகளின் உயிர் எழுத்துக்கள்



அன்பாய் 
ஆளும்
இனிய
ஈரிய நெஞ்சத்தின்
உறுதியாக
ஊற்றெடுக்கும்
எப்போதும்
ஐக்கியமாகும்
ஒளிவீசும்
ஓவியம்
ஔவையின் தமிழே
அஃது வாழும் என்னுயிர்...!

Wednesday, May 18, 2022

கொண்டாட்டம்


மகிழ்ச்சியின்
அளவுகோல்
அருகில் இருக்கும் 
மனிதர்களை பொருத்து....!

Monday, May 16, 2022

தேடல்


நல்லதொரு தேநீர்க்கு
பிறகு
சிறகடிக்கும் கற்பனைகள்....!

Monday, May 9, 2022

திகைப்பு


திடீர் மழையில்
மனமும் மண்ணும்
நனைந்த தருணம்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!